சில்லென்ற தென்றல் தழுவிச்செல்ல
சிங்காரமாய் வண்டுகள் ரீங்கரிக்க
புள்ளினக்கூட்டமெல்லாம் குதூகலிக்க
புதுக்காலையில் வருகிறான் கதிரவனே
ஆவினக்கன்றுகள் துள்ளிச்செல்ல
ஆனந்தமாய் அருவிகள் சலசலக்க
கணீர் என்ற மணியொலி சூழ்ந்துகொள்ள
கதிரவன் கரங்களைப்பரப்புகிறான்

பச்சை வயலது பரந்திருக்க - அதில்
இச்சையாய் மழைத்துளி குடியிருக்க
சுகந்தம் பரப்பிடும் மலர்களெல்லாம்
சுதந்திரமாகவே தலையசைக்க
பட்டாடை அணிந்த சிட்டுக்கள் போல
பறந்து செல்லும் சிறுவர் கூட்டம்
மிட்டாயைவிட இயற்கையை இரசிக்கும் - அவர்
இரசனைக்கு நிகர் வேறேதும் இல்லை
மங்கையர் மலர்சூடி மணிவிளக்கேற்றி
மங்கலமாய் மஞ்சளும் நெற்றியில் சூடி
பஞ்சமே இல்லாத பசுமை மண்ணின்
நெல்மணிகளை அன்னமாய் மாற்றுதல் காணீர்
அல்லும் பகலும் அயராது உழைக்கும்
மானிடப்பிறவியர் மனதுக்கு இனிமை
இறைவன் அளித்த இயற்கைக்கொடைகளை
அள்ளிப்பருகும் விந்தைதானே !!!
நீலா
ஆவினக்கன்றுகள் துள்ளிச்செல்ல
ஆனந்தமாய் அருவிகள் சலசலக்க
கணீர் என்ற மணியொலி சூழ்ந்துகொள்ள
கதிரவன் கரங்களைப்பரப்புகிறான்

பச்சை வயலது பரந்திருக்க - அதில்
இச்சையாய் மழைத்துளி குடியிருக்க
சுகந்தம் பரப்பிடும் மலர்களெல்லாம்
சுதந்திரமாகவே தலையசைக்க
பட்டாடை அணிந்த சிட்டுக்கள் போல
பறந்து செல்லும் சிறுவர் கூட்டம்
மிட்டாயைவிட இயற்கையை இரசிக்கும் - அவர்
இரசனைக்கு நிகர் வேறேதும் இல்லை
மங்கையர் மலர்சூடி மணிவிளக்கேற்றிமங்கலமாய் மஞ்சளும் நெற்றியில் சூடி
பஞ்சமே இல்லாத பசுமை மண்ணின்
நெல்மணிகளை அன்னமாய் மாற்றுதல் காணீர்
அல்லும் பகலும் அயராது உழைக்கும்
மானிடப்பிறவியர் மனதுக்கு இனிமை
இறைவன் அளித்த இயற்கைக்கொடைகளை
அள்ளிப்பருகும் விந்தைதானே !!!
நீலா
No comments:
Post a Comment