Pages

Saturday, September 10, 2011

இதய ஆதங்கத்தில் இருந்து...

இனிய காலைப்பொழுதின்
விடியலை இரசிக்கும் முன்பே
அழுகுரல்கள் கேட்கிறது என் தாய் மண்ணில்.


தலைவிதிப்படி பிறந்துவிட்டோம்
என்பதற்காய் வாழ்ந்து வந்த வேளையிலும்
எனக்குள்ளே எதிர்கால
இலட்சியம் ஒன்றிருந்தது.


தாய் தந்தை வளர்த்த வளர்ப்பிலே
இலட்சிய தாகமும் சேர்ந்தே இருந்தது.
மரணத்தின் விளிம்புகளைக்கடந்துகொண்டிருந்தபோதும்
என் இலட்சியம் நிறைவேறிவிடவேண்டுமென்ற வேகமே மீதமிருந்தது.


ஆனால் இப்போது...


பூமிப்பந்தின் வேறொரு புள்ளியில்
நின்றுகொண்டிருக்கும் எனக்கு
கல்வி கற்க வாய்ப்புக்கள்தானுண்டு.


இலட்சியத்தை தொடும் வேகமும் தாகமும்
தாராளமாகவே என்னிடமுள்ளதால்
இலக்கினை அடைந்துவிடும் 
நம்பிக்கையும் நிறையவே உண்டு.


ஆயினும்,


வைத்தியத்துறைத்தொண்டினை செய்திட
தாய்மண்ணும் என்னருகில் இல்லை, 
உணர்வுகளைத்தொலைத்துவிட்ட
உறவுகளும் தானில்லை.


எனினும்...


என் ஆசை நிறைவேறத்துடிக்கின்றவளாய் என்றும்...






நீலா

1 comment:

  1. இலட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்

    ReplyDelete