ஓர் விருட்சம் மலர்வது - அதன்
சந்ததியை விஸ்தரிக்க
காய் கனியாகுவது - அதன்
வித்துக்களை மண்ணில் விதைக்க
வித்துக்கள் விதையாகுவது - புது
விருட்சங்கள் தழைக்க
ஆகையால்,
வித்துக்கள் விதையாகுவது பழைய சந்ததியின் முடிவல்ல
புதியதொரு தலைமுறையின் தொடக்கம்!
இது விதயாகிப்போகும் வீர மறவர்களுக்கும் பொருந்தும்
ஏனென்றால்,
அவர்கள் 'விடுதலை' எனும் விருட்சத்தை
உருவாக்கும் வித்துக்கள் என்பதால்!
நீலா

