இயற்கை கற்றுத்தந்ததா - எமக்கு
இயலாமையை ?
இறைவன் கற்றுத்தந்தானா - எமக்கு
பொறாமையை ?
குழந்தை கற்றுத்தந்ததா - எமக்கு
கபட நாடகத்தை ?
குருவிக்கூட்டம் கற்றுத்தந்ததா - எமக்குள்
வேற்றுமையை ?
கற்றறிய வேண்டியவை பல இருந்தும்
கண் பார்வையற்றவராய் நிதம் வாழ்வது ஏன் ?
உற்ற உயிர் உடலை விட்டு பிரிவதையே அறியாத
நிலையற்ற வாழ்வில் போலி வேடமும் ஏன் ?
ஆறறிவாம் பகுத்தறிவை பரமனவன் தந்தாலும்,
சிற்றறிவால் சிதறுண்டு - வாழ்வின் உயர்
அர்த்தமத்தை அதர்மத்தால் அழிப்பதாலோ - நிதம்
தர்மமே அள்ளுண்டு போகின்றதோ ... ???
நீலா
