

வாழ்க்கையெனும் பட்டறையில்
புடம் போடப்படும் தங்கம்
பசும் பூந்தோட்டத்திலே
பூத்திடும் வெள்ளைப் பூவின் உள்ளம்
கடமையே கண்ணாகக்
கனன்றிடும் நெஞ்சம்
கடவுளையே மிஞ்சிடும்
தியாகத்தின் சின்னம்
நான் பொக்கிஷமாய் பேணவேண்டிய
'தங்கக்கிண்ணம்'
அவள் தான் என் தாய்
இது திண்ணம்!
நீலா