Pages

Friday, December 30, 2011

குடும்பம் ஒரு கதம்பம்

பசுமை நிறைந்த குடும்பம் - அது 
பாசப்பிணைப்பின் உச்சம் 
இனிமை என்றும் திகழும் - அதில் 
தானே வாழ்கை சிறக்கும் 

இன்ப துன்பம் சகஜம் - அதில் 
கோப தாபம் ஜனனம் 
அன்பு கொண்டு அணைத்தால்
எங்கும் பரவசமே பரவும் 

குறும்புத்தனம் புரியும் 
சிறுவர்களின் பருவம் 
அரும்பி வரும் மழலை மொழி 
அருந்திடவே ஆசை 

அனுபவத்தால் முதிர்ச்சி கண்ட 
பெரியோரின் மகிழ்ச்சி - அதில் 
ஆசி பெரும் அனைவருக்கும் 
மனதில் என்றும் திருப்தி 

மண்ணில் மலரும் மலர்கள் - அவை 
மாணிக்கங்கள் தானே 
சில குடும்பச்சூழ்நிலைகளினால்
வாழ்வு கேள்விக்குறி தானே 

வண்ண வண்ண மலருடன் 
கூடிப்பிறந்தது தான் சுகந்தம் 
இன்ப துன்ப உணர்வில் என்றும் 
கலந்தது தான் குடும்பம் 


அதனால் ...




குடும்பம் ஒரு கதம்பம் - அது 
வாழ்வின் சுவை உணர்த்தும். 



நீலா

Tuesday, December 13, 2011

வாழ்க்கை

வாழ்வில் நீ தேடவேண்டியது இலக்கை 
அதை அடைய உனக்குத்தேவை தன்நம்பிக்கை 
துன்பங்களால் கிடைப்பது அழுகை - அதை 
துடைத்திடும் தன்நம்பிக்கை தான் உன் வலக்கை 

வாழ்க்கையின் மேடையில் நீ ஒரு நடிகை 
நீ சந்திக்கும் சவால்கள் தான் நாடக ஒத்திகை 
விரக்தியின் விளிம்பிலே காட்டதே வெறுப்பை 

ஏனென்றல் .....

இவ் அனைத்தும் நிறைந்தது தான் வாழ்க்கை. 



நீலா